ரயிலில் வகுப்பு மாறி பயணம் செய்த 350 பேர் கைது
சென்னை:
சென்னை-மங்களூர் ரயிலில் முன் பதிவே செய்யாமல் முதல் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்து "ஹாயாக"ச் சென்றுகொண்டிருந்த 350 பயணிகளை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரயில்களில் ஏராளமான பயணிகள் வகுப்பு மாறிப் பயணம் செய்து கொண்டிருப்பதாக ரயில்வே துறைக்குப்புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இதையடுத்து இது தொடர்பாக ரயில்களில் திடீர் சோதனை நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி நேற்று இரவு சென்னையிலிருந்து மங்களூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வேபோலீசார் உதவியுடன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முன்பதிவே செய்யாமல் முதல் வகுப்புப் பெட்டிகளில் "ஹாயாக" உட்கார்ந்து கொண்டு பயணம் செய்துகொண்டிருந்த 350 பேரைப் போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நேற்றிரவில் மட்டுமே சுமார் ரூ.25,000 வரை வசூலிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications