தண்டவாளத்தில் விரிசல்: கோவை ரயில்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
வாஞ்சிப்பாளையத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் இன்று காலை கோயம்புத்தூருக்குவரவேண்டிய ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாக வந்தன.
ரயில்வே லைன்மேன் ஒருவர் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு, உடனடியாக அருகில் உள்ளஅனைத்து ரயில் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து கோயம்புத்தூருக்கு இன்று காலை வந்து சேர வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ்உள்ளிட்ட பல ரயில்கள் ஈரோடு ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்துடன் இந்த ரயில்கள்கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை அடைந்தன.












Click it and Unblock the Notifications