போக்குவரத்துக்கழக ஊழல் வழக்கு: செங்கோட்டையன் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெ.ஜெ. போக்குவரத்துக்கழகத்தில் நடந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டஅப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தனி நீதிமன்றம் இன்றுதீர்ப்பளித்தது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியது, சொகுசுபஸ் வாங்கியது ஆகியவற்றில் 1 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 527 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி தனிநீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

செங்கோட்டையன் தவிர, அப்போதைய ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநர் சேதுராமன்,செங்கோட்டையனின் உதவியாளர் எழில் மற்றும் கோபி நடராஜன் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 1997ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விசாரணை தொடங்கியது.

அரசுத் தரப்பில் ஆஜரான 75 சாட்சிகளில், 45 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர். எதிர்த் தரப்பு சாட்சிகள் எதுவும்இல்லாத நிலையில் கடந்த 8ம் தேதி இந்த வழக்கு தொடர்பான வக்கீல்களின் விவாதங்கள் முடிவடைந்தன.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி அன்பழகன் வழங்கினார்.

அரசுத் தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சரிவர நிரூபிக்கப்படாததால், இவ்வழக்கில் தொடர்புடையசெங்கோட்டையன், சேதுராமன், எழில் மற்றும் கோபி நடராஜன் ஆகிய அனைருமே விடுதலை செய்யப்படுவதாகநீதிபதி அன்பழகன் தன் தீர்ப்பில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+