வீரப்பன் காட்டுக்குள் நடந்த மருத்துவ முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மலைவாழ் மக்களின் உதவியைப் பெறும் பொருட்டு, அவர்கள் வாழும்பகுதிகளில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் ஒன்றுக்கு அதிரடிப் படையினர் ஏற்பாடு செய்தனர்.

கடந்த ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையும் இந்திய மருத்துவ சங்கத்தின்தமிழகக் கிளையும் சேர்ந்து இந்தப் பரிசோதனை முகாமை நடத்தின.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையையும் மருத்துவ சங்கத்தையும் அதிரடிப் படையினரின் கூடுதல்டி.ஜி.பியான ஆர். நடராஜ் நாடினார்.

அவர்களும் உடனடியாக இதற்குச் சம்மதித்தனர். 12 டாக்டர்கள் மற்றும் சில மருத்துவப் பணியாளர்களும் கொண்டஅப்போலோ மருத்துவமனைக் குழுவினரும் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் காடுசெல்லத் தயாராகினர்.

அதிரடிப் படையினரின் பாதுகாப்பு சூழ காட்டுக்குள் சென்ற மருத்துவக் குழுவினர், மலைவாழ் மக்களுக்குமருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சுமார் ரூ.50,000 மதிப்புள்ள மாத்திரை மற்றும் மருந்துகளையும்அவர்கள் மலைவாழ் மக்களுக்கு அளித்து உதவினர்.

இரு நாட்கள் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவக் குழுவினர் அனைவரும் மீண்டும் பத்திரமாகக்காட்டிலிருந்து வெளிவந்தனர்.

அப்போலோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவலைக் கூறியுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகள் அளிக்கப்பட்டதன் மூலம் வீரப்பனைப் பிடிப்பதற்கு அந்த மலைவாழ் மக்கள் உதவிசெய்வார்கள் என்று அதிரடிப்படையினர் முழுமையாக நம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+