சென்னையில் 73,000 லிட்டர் போலி மினரல் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் இன்று மட்டும் 73,000 லிட்டர் அளவுள்ள ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள்,பாட்டில்கள் மற்றும் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தண்ணீரையும் உணவு என்பதன் கீழ் கொண்டு வந்து அதற்கான தரத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி,கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்தது.
இவ்விஷயத்தில் தமிழக அரசும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக சென்னையிலும்கோயம்புத்தூரிலும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, ஐ.எஸ்.ஐ. இல்லாத தண்ணீர் பாட்டில்கள்,பாக்கெட்டுகள் மற்றும் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 73,000 லிட்டர் அளவிற்கு போலிதண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி தண்ணீர் பாட்டில்களைத் தேடி சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து "வேட்டையில்" ஈடுபடுவார்கள் என்றுதெரிகிறது.


Click it and Unblock the Notifications
