நாயுடுவுக்கு ஐஸ் வைக்க விரைகிறது பா.ஜ.க. குழு
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள்எதிர்த்து வாக்களித்துவிடாமல் தடுக்க அக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து வலியுறுத்த பா.ஜ.க.குழு ஹைதராபாத் செல்கிறது.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் அமைமக்கப்பட்டுள்ள இந்தக்குழிவில் மேலும் 2 முக்கிய பா.ஜ.க. தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நாளை ஹைதராபாத் செல்கின்றது. அவர்கள் சந்திரபாபு நாயுவைச் சந்தித்து அவரைச்சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்.
ஏற்கனவே பிரதமர் வாஜ்பாய் தினந்தோறும் நாயுடுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
குஜராத்தில் கலவரத்தை முன்னின்று நடத்தி வரும் நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்என சந்திரபாபு நாயுடு கோரி வருகிறார். அவரது கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டது.
இதனால் மோடியை நீக்குவது தொடர்பாக கொண்டு வரப்படும் ஒட்டெடுப்பில் என்ன மாதிரியான நிலையைதெலுங்கு தேசம் எடுக்கும் என்பது குறித்து நாயுடு ஏதும் கூறாமல் இருந்து வருகிறார்.
இதனால் டென்சனில் ஆழ்ந்துள்ள பா.ஜ.க. அவரை எப்படியாவது சமாதானப்படுத்தும் முயற்சிகளில்ஈடுபட்டுள்ளது.
தெலுங்கு தேசம் எம்.பிக்கள்:
அவரது கட்சி எம்.பிக்களில் பலரும் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.இதையடுத்து தனது எம்.பிக்கள் அனைவரையும் ஹைதராபாத் வருமாறு நாயுடு அழைத்துள்ளார். அவர்களுடன்இன்றும் நாளையும் நாயுடு ஆலோசனை நடத்துவார்.
இந் நிலையில் இந்த ஓட்டெடுப்பு குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமும் நாளை கூடுகிறது.
மேலும் 3 பேர் கொலை:
அதே நேரத்தில் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து கொண்டுள்ளது. நேற்றிரவில் அகமதாபாத்தில் நடந்தவன்முறையில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைகளைக் கண்டித்து பிரிட்டன் தூதரகம் நேற்றும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதை மத்திய அரசும்,காங்கிரஸ் கட்சியும் எதிர்த்துள்ளன. இந்தியாவின் உள் விவகாரங்களில் பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன்நாடுகள் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
பிரிட்டன் வருத்தம்:
இதையடுத்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா நேற்று இரவு இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
குஜராத் கலவரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டதற்கு வருத்தம்தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications