குஜராத் முஸ்லீம் இளைஞர்களை கெடுக்கும் பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

கோத்ரா:

குஜராத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தை நடத்தியதே பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தான் என்பதுஉறுதியாகியுள்ளது.

குஜராத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராமஜென்ம பூமிக்கு கரசேவகர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த ரயில் எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் அம் மாநிலத்தில் வன்முறை வெடித்தது.

இந்த ரயில் எரிப்புக் குறித்து விசாரணை நடத்திய 5 பேர் கொண்ட குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:

கோத்ராவில் ரயில் எரிப்பை நடத்தியது ஐ.எஸ்.ஐ. உதவியுடனான தீவிரவாத அமைப்புகள் தான். இத் தாக்குதலுக்குரசாயண குண்டுகளும், வெடி குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரயிலை நிறுத்துவதற்கு உதவும் ஹைட்ரலிக் பிரேக்கின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது ஒருதிட்டமிட்ட சதி என்பது உறுதியாகிறது.

மேலும் ரயில் எரிப்பு சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கோத்ராவில் இருந்து கராச்சிக்கு மிக அதிக அளவில்ஐ.எஸ்.டி. தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பில்லாத இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏகப்பட்ட செல்போன்கள் உள்ளன.இவர்களுக்கு இந்த வசதி எப்படி வந்தது?

ஐ.எஸ்.ஐ. வழங்கி வரும் பணத்தில் தான் இவர்கள் வசதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஐ.எஸ்.ஐ. வழங்கும்ப் பணம் தான் தீவரவாதத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுத்தி வருகிறது என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+