நடந்ததை மறப்போம்: அமைதி பேரணியில் மோடி பேச்சு
அகமதாபாத்:
குஜராத் வன்முறைகளைக் கண்டித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இன்றுஅகமதாபாத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் மத அமைப்பினர் கலந்து கொண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.
சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு நடந்த இந்த" அமைதிப் பேரணியில் சட்டத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, சமதா கட்சித்தலைவர் ஜெயா ஜேட்லி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இருந்தபோதிலும் குஜராத் வன்முறைகளைத் தூண்டி விட்டு, பதவியும் விலகாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாநில முதல்வரான நரேந்திர மோடியும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டதுதான்அனைவருடைய புருவத்தையும் உயரச் செய்தது.
"குஜராத்தில் நடந்தவற்றை மறப்போம். வன்முறையில் ஈடுபடுபவர்களை தனிமைப்படுத்துவோம். அமைதியைக்கொண்டுவர அனைவரும் பாடுபடுவோம்" என்று பேரணியின்போது மோடி பேசினார்.
அகமதாபாத்தில் உள்ள முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக இந்தப் பேரணி சென்றது. ஆனாலும் பலத்தபோலீஸ் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்புடன் பேரணி மிகவும் அமைதியாகவே முடிவடைந்தது.
வன்முறைக்கு மேலும் 6 பேர் பலி:
இதற்கிடையே தொடர் வன்முறை காரணமாக, அகமதாபாத்தில் மூன்று பேரும் பரோடாவில் மூன்று பேரும்கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் உள்ள சந்தோலா லேக் பகுதியில் போலீசார் மீது வன்முறையாளர்கள் நாட்டு வெடிகுண்டுகளைசராமாரியாக வீச ஆரம்பித்தனர்.
இதனால் வெகுண்டெழுந்த போலீசார், அந்த வன்முறைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.
பரோடாவிலும் வன்முறைக் கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். சிலநாட்களுக்கு முன் வன்முறையில் காயமடைந்த ஒரு பெண்ணும் உயிரிழந்தார்.
இந்த இரு நகரங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.












Click it and Unblock the Notifications