வந்ததய்யா வன்னியர் முதல்வராகும் காலம்: ராமதாஸ் நப்பாசை
மாமல்லபுரம்:
வன்னியர் ஒருவர் முதல்வராக வந்தால்தான் வன்னியர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் அதுபோலவே நடந்த கூட்டம் அரசியல் கட்சி என்ற அளவில் இல்லாமல் வன்னியர் சமூககூட்டமாகவே இது இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர் ஒருவர் முதல்வராக வர வேண்டிய காலம் வந்து விட்டது. வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தால்தான்வன்னிய சமுதாயம் உருப்பட முடியும். அவர்களது துயரம் எல்லாம் மறையும்.
கல்வி, பொருளாதாரம், சமூக அளவில் வன்னியர்கள் இன்னும் பிற்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள். உயர்பதவிகளில் இருக்கும் வன்னியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
2006ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அப்போதுதான் வன்னியர் சமுதாயம்பலனடையும் என்றார் ராமதாஸ்.
ராமதாஸின் மகன் அன்புமணி பேசுகையில், எனது அப்பாவின் காலடியைப் பின்பற்றி நானும் கிராமந்தோறும்சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications