சிங்கப்பூர்: இந்திய என்ஜினியருக்கு 25 மாதம் ஜெயில்
சிங்கப்பூர்:
போலி கம்ப்யூட்டர் புரோக்ராம்களைத் தயாரித்து, தன்னுடைய கம்பெனியின் முக்கிய பைல்களை அழித்த மீனாட்சிசுப்பு என்ற இந்திய என்ஜினியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 25 மாதம் ஜெயில் தண்டனை அளித்தது.
எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரான மீனாட்சி சுப்பு, கம்பெனியின் முக்கிய பைல்களை அழிக்கவல்ல கம்ப்யூட்டர்புரோக்ராமைத் தயாரிக்க முடியும் என்று தன்னுடைய நண்பனிடம் சவால் விட்டார்.
அதோடு நின்று விடாமல் இரண்டு சாப்ட்வேர் புரோக்ராம்களையும் மீனாட்சி சுப்பு தயாரித்தார்.
அந்த புரோக்ராம்களை அப்படியே தன் கம்பெனியின் கம்ப்யூட்டரில் அவர் அப்ளை செய்யவே, 2,321 முக்கியபைல்கள் காலியாகின.
இதையடுத்து 23 வயதான மீனாட்சி சுப்புவை சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர். "கம்ப்யூட்டர் மிஸ்யூஸ்சட்ட"த்தின் கீழ் அவருக்கு 25 மாதங்கள் தண்டனையளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமைதீர்ப்பளித்தது.
கம்பெனியைச் சேர்ந்த மற்ற சாப்ட்வேர் என்ஜினியர்கள், காலியான அந்த 2,321 பைல்களையும் மீட்டுக் கொண்டுவருவதற்குள் அதற்காக 5,97,000 டாலர்கள் செலவாகியதாக "சண்டே டைம்ஸ்" என்ற பத்திரிக்கை தெரிவித்தது.












Click it and Unblock the Notifications