காங்கிரசுடன் இணைப்பு எப்போ? - வாசன் விளக்கம்
சென்னை:
குஜராத் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஓட்டெடுப்புக்குப் பின்னர் காங்கிரசுடன்தமாகா இணைப்பு தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று தமாகாவின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இணைப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ஆலோசனை நடத்திவிட்டு நேற்றுசென்னை திரும்பிய அவர், இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
அது முடிந்ததும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலா மீண்டும் சென்னை வந்துஇணைப்பு பற்றி பேச்சு நடத்துவார்.
அதன் பிறகு இணைப்பு தேதி குறித்து தெரிவிப்போம். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதே எங்களுடையமுக்கியமான குறிக்கோள்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
தமிழக சட்டசபையில் சபாநாயகர் காளிமுத்துவுக்கு எதிராக திமுகவினர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை ஆதரிப்போமா, இல்லையா என்பது குறித்து அப்போதுதான் முடிவெடுப்போம் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications