பெண்ணாகரத்தில் பெண் சிசு கொலை: 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெண்ணாகரம்:

பெண்ணாகரத்தில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம்தொடர்பாக அக்குழந்தையின் தாய், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெண்ணாகரம், ஊத்தங்கரை மற்றும் கம்பைநல்லூர் பகுதியில் தொடர் பெண்சிசு கொலைகள் நடந்து வருகின்றன.

பெண்ணாகரத்தை அடுத்த நாகமரை மேல்தரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(28). இவரது மனைவிசாரதா(22). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உண்டு.

இந்நிலையில் இவர்களுக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாரதாவிடம் போதிய தாய்ப்பால்இல்லாததால், குழந்தை பால் குடிக்காமல் இறந்து விட்டதாகக் கூறி காதும் காதும் வைத்ததுபோல் குழந்தையைப்புதைத்து விட்டனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்காக அவ்வூருக்குச் செவிலியர்கள் வந்துள்ளனர். அப்போதுவிசாரித்தபோதுதான் அந்தக் குழந்தைக்கு விஷம் கொடுத்து அதனுடைய பெற்றோர்கள் கொன்ற விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபோது, விஷம்கொடுக்கப்பட்டது உண்மைதான் என்றும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் சாரதா, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரைப்போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் கட்டிடத் தொழில் செய்து வரும் குழந்தையின் தந்தையைப் போலீசார்தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+