மதுரை பல்கலைக்கழகத்தில் நடந்த கோல்மால்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நன்றாகத் தேர்வெழுதிய ஒரு கல்லூரி மாணவியின் விடைத்தாள்திருடப்பட்டுள்ளது.

அந்த விடைத் தாளை வகுப்பில் மிக சுமாராக தேர்வெழுதிய ஒரு மாணவரின் விடைத் தாளாக மாற்றியுள்ளனர்.சரியாக தேர்வெழுதாத இந்த மாணவரின் விடைத் தாளை மாணவியின் விடைத் தாளாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் பொன்னுசாமி நிருபர்களிடம்கூறியதாவது:

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் ஜெயராஜ ராஜேஸ்வரி என்ற மாணவியின்விடைத்தாள்களில் ஒரு சில பக்கங்களை காணவில்லை. அந்த விடைத்தாள்கள் கோடீஸ்வரன் என்ற மாணவரின்விடைத்தாள்களோடு சேர்ந்து இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த தேர்வில் கோடீஸ்வரன் தேர்ச்சி பெற்று விட்டார். ராஜேஸ்வரியும் 35 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

ஆனால் ராஜேஸ்வரி நன்றாக படிக்கும் மாணவியாதலால், அவர் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்களைஎதிர்பார்த்தார். குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, தன்னுடைய தேர்வுவிடைத்தாளின் நகலை வாங்கிப் பார்த்தார்.

அதில் அவருடைய கையெழுத்தே இல்லாத பக்கங்கள் இடையில் இருந்தது அவருக்குப் பெரிய அதிர்ச்சியைதந்தது. இதுபற்றி பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் புகார் செய்தார்.

இதையடுத்து நடந்த விசாரணையின்போது, அவருடைய விடைத்தாள்களின் ஒரு சில பகுதிகள், கோடீஸ்வரனின்விடைத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தவறு எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அடுத்த செமஸ்டர்தேர்வின்போது, 5 பேர் கொண்ட பறக்கும் படை திடீர் சோதனையிடும் என்று பொன்னுசாமி கூறினார்.

இந்த விடைத் தாள் திருட்டில் பல்கலைக்கழக ஊழியர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. கருதுகிறது.காசுக்காக இவர்கள் இந்த கோல்மாலைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுவதால் அந்தக் கோணத்தில் விசாரணைநடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+