நெல்லையில் கொட்டிய கோடை மழை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த இரண்டு மாதங்களாகக் கோடை வெயிலால் திருநெல்வேலி மக்கள் வாடி, வதங்கிப் போயிருந்தனர்.வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் அவர்களை வாட்டியெடுத்தது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்தது. திருநெல்வேலியிலும்அதன் சுற்று வட்டாரங்களிலும் நல்ல மழை பெய்தது.
இதனால் திருநெல்வேலி மக்கள் மிகவும் மகிழ்ந்து போயினர். பலரும் கொட்டும் மழையில் வந்து குளிக்கவும்ஆரம்பித்தனர்.
சாலைகளில் ஆங்காங்கே மழை வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இந்தத் திடீர் மழையால் வாடிப் போய்க் கிடந்த பயிர்கள் உயிர் பிழைக்கத் தொடங்கியதைக் கண்டு, ஏராளமானவிவசாயிகளும் மகிழ்ந்து போயினர்.












Click it and Unblock the Notifications