""தமிழர்களுக்கு துரோகம் செய்த தமிழக அரசு"": வைகோ ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு துரோகம்செய்து விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

புலிகளுக்கு எதிராகத் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது ஈழத் தமிழகர்களுக்குத் துரோகம்விளைவிப்பதாகும்.

அந்தத் தீர்மானத்தை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுக்க வேண்டிய திமுக, கடமை தவறி நடுநிலை வகித்துள்ளதுவரலாற்றுப் பிழையாகும்.

புலிகளும் இலங்கை அரசும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை உலகமேபாராட்டி வரவேற்கின்றது. அப்படி இருக்கும்போது தமிழர்களாகிய நாமும் அதை வாழ்த்தி வரவேற்பதுதான்சரியாகும்.

இலங்கை இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தாய்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைவெற்றி பெற மதிமுக வாழ்த்துகிறது. பேச்சுவார்த்தையை நடத்தும் நார்வே அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு பல தவறுகளைஇழைத்து விட்டது. எனவே இந்தியா தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்து பேச்சுவார்த்தை வெற்றி பெற்று,ஈழத்தில் அமைதி திரும்ப உதவ வேண்டும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+