மகள் பிறந்த நாளில் தாய், தந்தை விபத்தில் பலி
சென்னை:
மகளின் பிறந்த நாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அப்பாவும், அம்மாவும் கார் மோதிபரிதாபமாக இறந்தனர்.
சென்னை பல்லாவரம் பகுதியில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகே டெப்போ லேன்பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன். இவரது மனைவி கலா. இவர்களது 3 வயதுக் குழந்தை ஷியாலினிக்கு திங்கள்கிழமைபிறந்தநாள்.
இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டுக்கு அழைத்து மகளின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இரவு வரை இந்தக் கொண்டாட்டம் தொடர்ந்தது. அதன் பிறகு ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றனர். அவர்களை வீட்டுவாசலில் நின்று வழியனுப்பிக் கொண்டிருந்தனர் கண்ணன் குடும்பத்தினர்.
அனைவரும் சென்ற பின்னர் உறவினர் மேத்யூ பால் என்பவருடன் கண்ணனும், கலாவும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.கைக் குழந்தை ஷியாலினியும் உடன் இருந்தாள்.
அப்போது வேகமாக வந்த அம்பாசடர் கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கண்ணனும், கலாவும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஷியாலினி மற்றும் மேத்யூ பால் ஆகியோருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications