அண்ணா பல்கலை எம்.சி.ஏ., எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் மே 5ம் தேதி நடக்கவிருந்த எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கானநுழைவுத் தேர்வு மே 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுவரும் மே 5ம் தேதி நடப்பதாக இருந்தது.
ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இதே படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 12ம் தேதிதான்நடக்கவுள்ளது.
எனவே அண்ணா பல்கலைக்கழக எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் மே 12ம்தேதியே நடக்கும்.
இதற்காக விண்ணப்பம் செய்துள்ள மாணவ-மாணவிகளுக்கு விரைவில் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பிவைக்கப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications