ஜெயாவைக் கண்டித்து இலங்கையில் பேரணி, வன்முறை
திரிகோணமலை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவர வேண்டும்என்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து திரிகோணமலையில் நடத்திய பேரணிவன்முறையில் முடிவடைந்தது.
இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டிய தமிழகமே அவர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது என்றும் தற்போது நடந்து வரும் அமைதி முயற்சிகளைக் குலைக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தபேனர்கள் பேரணியின்போது இடம் பெற்றன.
பேரணியில் பங்கேற்பதற்காக வந்திருந்த வாகனங்களின் பதிவு எண்களைப் போலீசார் குறிக்கஆரம்பித்ததையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
இச்சம்பவத்தில் மூன்று ராணுவ வீரர்களும் ஒரு போலீசும் காயமடைந்தனர். இதையடுத்து நான்கு தமிழர்களைவிசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்களை விடுவிக்க மறுத்து விட்டனர்.
இந்த நான்கு தமிழர்களில் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications