நண்பர்களுக்கு காதலியைப் "படைத்த" கயவன்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே இளம்பெண்ணைக் காதலிப்பதுபோல் நடித்து மிரட்டி அவளைத் தன் நண்பர்களின் காமப்பசிக்கு இரையாக்கிய வாலிபன் உள்பட 20 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் துரைராஜ். முன்னாள் கூட்டுறவு வங்கி ஊழியரானஇவருடைய ஒரே மகள் சத்யா (18).

10ம் வகுப்பு படித்துள்ள சத்யா, பெரம்பலூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் படித்து வந்தார்.

இதே கம்ப்யூட்டர் மையத்தில் படித்து வந்த பெரம்பலூர் மாணவன் ஒருவனுக்கும் சத்யாவுக்கும் இடையே காதல்மலர்ந்தது. காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பிய சத்யா, அவனுடன் பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாகஇருந்தார்.

பல சந்தர்ப்பங்களில் சத்யா காதல் போதையில் இருக்கும்போது, அவருக்குத் தெரியாமலேயே அந்தக் காதலன்அவரைப் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினான்.

பின்னர் அந்தப் படங்களை சத்யாவிடம் காட்டிக் காட்டியே, அவரைத் தன்னுடைய நண்பர்களின் காமப் பசிக்குஅவன் இரையாக்கினான்.

பெரம்பலூரில் உள்ள ஒரு வீட்டையே வாடகைக்குப் பிடித்து, அங்கே சத்யாவை வரவழைத்து அந்தக் காதலன் தன்நண்பர்களுடன் காமப்பசியைத் தீர்த்துக் கொண்டான்.

இதோடு விட்டுவிடாமல் சத்யாவை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் உல்லாசமாகஇருந்தனர்.

இந்நிலையில் சத்யா திடீரென்று கர்ப்பமானார். விஷம் அவருடைய பெற்றோருக்கும் தெரிய வரவே, நடந்தஅனைத்தையும் ஒன்று விடாமல் அவர்களிடம் அவர் கூறிவிட்டார்.

தான் சீரழிக்கப்பட்ட விஷயம் தன்னுடைய பெற்றோருக்குத் தெரிந்து விட்டதே என்று வேதனையடைந்த சத்யா,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய உடம்பில் கெரசினை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, அவரைக் காப்பாற்றி, பெரம்பலூர்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் துரைராஜ் புகார் செய்தார். சத்யாவை மிரட்டிக் கற்பழித்தஅவருடைய காதலன் உள்பட 20 பேர் மீது வாக்கு பதிவு செய்த போலீசார், அவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+