குண்டுகள் தவறுதலாக வெடித்து 7 ராணுவ வீரர்கள் பலி
ஜெய்ப்பூர்:
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ முகாமில் டிரக்குகளிலிருந்து வெடிகுண்டுகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது, அவை தவறுதலாக வெடித்ததில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஜெய்ப்பூர் அருகே மஹாஜன் கிராமத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ராணுவ முகாமிற்கு வெடிகுண்டுகள்,கண்ணி வெடிகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு 10 டிரக்குகள் வந்து சேர்ந்தன.
அந்த டிரக்குகளிலிருந்து வெடிபொருட்களை ராணுவ வீரர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு டிரக்கிலிருந்து வெடிபொருட்கள் திடீரென்று வெடிக்க ஆரம்பித்தன. அவை அப்படியே மற்றடிரக்குகளில் உள்ள வெடிபொருட்கள் மீதும் சிதறி வெடித்ததால் அங்கிருந்த வெடிபொருட்களும் வெடித்தன.
இந்தப் பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தில் சிக்கிக் கொண்டு ஏழு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் படுகாயங்களுடன் சூரத்கார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வெடிகுண்டுகள் சராமாரியாக வெடித்துச் சிதறியதில் மூன்று டிரக்குகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின. மேலும்இரண்டு டிரக்குகள் பலத்த சேதமடைந்தன. மற்ற ஐந்து டிரக்குகளையும் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகராணுவ வீரர்கள் அப்புறப்படுத்தி விட்டனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். வெடிபொருட்கள் எப்படிவெடித்துச் சிதறின என்பது குறித்த தகவல் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதே எல்லைப் பகுதியில் உள்ள ஒரு ராணுவக் கிடங்கில் வெடிபொருட்கள்திடீரென்று வெடித்துச் சிதறின என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications