மரக்காணம் சம்பவம்: சட்டசபையிலிருந்து பாமக வெளிநடப்பு
சென்னை:
மரக்காணத்தில் பாமக தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் காளிமுத்து பேசஅனுமதிக்காகததையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரவு வன்னியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தவிழாவுக்காக மாமல்லபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த பாமக தொண்டர்கள், வழியில் மரக்காணம் என்ற ஊரில்தலித் மக்களால் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கரத் தகராறில் புளியம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு அதிமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டியதுபாமக.
இந்நிலையில் மரக்காணம் சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபை பாமக தலைவரான மணி பேச முயற்சித்தார்.இந்தச் சம்பவத்தில் 200க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு உரிய நிவாரணம்வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் அவர் மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கு காளிமுத்து மறுத்ததையடுத்து, பாமக எம்.எல்.ஏக்கள்அனைவரும் மணி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மரக்காணம் சம்பவம் தொடர்பாக 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 33 பேர் தலித்துகள் என்றும் எஞ்சிய ஆறு பேர் வன்னியர்கள் என்றும்தெரிவித்தார். இது தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சட்டம்-ஒழுங்குப் பிரிவு ஐ.ஜி. தலைமையில் அங்கு நூற்றுக்கணக்கானபோலீசார் முகாமிட்டதையடுத்து, அங்கு பெரும் கலவரம் பரவாமல் பாதுகாக்கப்பட்டது என்றும் ஜெயலலிதாகூறினார்.
முன்னதாக இந்தப் பிரச்சனை குறித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன், போலீசார் முன் கூட்டியேதக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மோதல் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications