ராதாரவிக்கு சைதாப்பேட்டை: அதிமுகவினருக்கு ஜெ. கொடுத்த ஷாக்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நடிகர் ராதாரவியை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் இத்தனை நாட்களாக விசுவாசமாககட்சிப் பணியாற்றி வந்ததற்கு அவருக்கு சரியான பரிசைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
அதே நேரத்தில் சைதாப்பேட்டை பகுதி அதிகவினர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திமுகவின் தீவிர மேடைப் பேச்சாளர்களாக இருந்து வந்தவர்கள் எஸ்.எஸ்.சந்திரனும், ராதாரவியும். இவர்கள் இருவரும் திடீரென ஒரு நாள்அதிமுகவில் சேர்ந்தனர். அப்போது அதிமுக ஆட்சியில் இல்லை, திமுக ஆட்சியில் இருந்தது.
திமுகவில் எங்களுக்கு மரியாதையே இல்லை, நாயை விட கேவலமாக மதிக்கப்பட்டோம் என்று சந்திரனும், ராதாரவியும் பேட்டியளித்தனர்.
திமுகவுக்காக குடும்பத்தையே அர்ப்பணித்த எம்.ஆர்.ராதாவின் வாரிசான ராதாரவிக்கு, அரசுப் பதவி எதையும் கொடுக்காத திமுக,சாதாரண முன்னாள் நடிகரான சந்திரசேகருக்கு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைக் கொடுத்தது.
இதனால் அதிருப்தியுற்ற ராதாரவி, அந்தப் பதவிக்குக் கூட தான் தகுதியில்லையா என்று வெகுண்டெழுந்தார். இந் நிலையில்தான்சந்திரனுடன் சேர்ந்து அதிமுகவுக்குத் தாவினார்.
இந் நிலையில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா எஸ்.எஸ். சந்திரனை ராஜ்யசபா எம்.பியாக்கினார். இதனால் ஓவராக உணர்ச்சிவயப்பட்டஎஸ்.எஸ்.சந்திரன் ஜெயலலிதாவை எப்படிப் புகழ்வது என்று தெரியாமல் இன்றும் கூட தவித்து இருக்கிறார்.
திமுவில் வெறும் பேச்சாளர்களாகவும், கூட்டத்தைக் கூட்ட உதவும் காமடிக் கருவியாகவும் மட்டுமே எஸ்.எஸ்.சந்திரனை பயன்படுத்தியதாகஅவரது ஆதரவாளர்கள கூறுகின்றனர்.
அதேசமயம், ராதாரவிக்கு பெரிய பதவி எதையும் ஜெயலலிதா கொடுக்காமல் இருந்து வந்தார். ஆனால், நிச்சயம் ஏதோ கிடைக்கும் என்றநம்பிக்கையில் இருந்த ராதாரவி கட்சிப் பணியில் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தார்.
கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு திமுகவையும் கருணாநிதியையும் திட்டி வந்தார். இந் நிலையில்தான் இயல், இசை, நாடக மன்ற செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
இப்போது சைதாப்பேட்டை தொகுதியில் ராதாரவியை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
இதன்மூலம் திமுகவினரை விட அதிமுகவினர் தான் அதிக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதியைப் பொருத்தவரை அந்தத் தொகுதி மக்களுக்குத் தெரிந்தது இரண்டே பெயர்கள்தான். ஒருவர் சைதை கிட்டு, தீவிரமான திமுக விசுவாசி, கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்.
இன்னொருவர் சைதை துரைசாமி. இவர் எம்.ஜி.ஆர். காலத்து ஆசாமி. மிக நல்ல மனம் படைத்தவர், குடிசைப் பகுதி மக்களுக்கு கட்சிபாகுபாடு பார்க்காமல் உதவி செய்பவர். சுற்றுச்சூழலில் ஆர்வம் உடைய வித்தியாசமான அரசியல்வாதி. அதிமுக மீது ஊழல் புகார்கள்இருந்தபோதும் கூட கடந்த தேர்தலில் மிக அதிக வாக்கு பெற்றார். திமுகவுக்கு கடும் போட்டி தந்தார்.
நீண்ட காலமாக கட்சியில் இருந்து வரும் அவருக்கு சீட் கொடுக்காமல், இடையில் வந்து சேர்ந்த ராதாரவிக்கு சீட் கொடுத்துள்ளதன் மூலம்சைதை பகுதி அதிகவினர் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும் அம்மா சொன்னால், சொன்னதுதான் என்று தங்களைத் தாங்களே ஆறுதப்படுத்திக் கொண்டுள்ளனர்.
திமுக சார்பில் இங்கு சைதை கிட்டு போட்டியிடுவார் என்று தெரிகிறது. இவருக்கு தொகுதியில் நல்ல, கெட்ட பெயர் கலந்து உள்ளது. கட்டைபஞ்சாயத்து, அடிதடியில் இவர் பெயர் அடிபடுவது உண்டு.
ஆனால், கலைஞரின் செல்லப் பிள்ளை என்ற பெயர் இவரை தொகுதி மக்களிடம் நெருக்கமாக்கி வைத்துள்ளது.
ஆக கடும் போட்டிக்கு தயாராகி வருகிறது சைதாபேட்டை.
வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் வேட்பாளர்கள்:
இதற்கிடையே இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மற்ற இரு தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களும்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் விவசாயப் பிரிவு செயலாளரான வடிவேல் வாணியம்பாடி தொகுதியிலும், பூவராகமூர்த்திஅச்சிறுப்பாக்கம் தொகுதியிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications