சென்னை ரயிலில் நகைகள் கொள்ளை
அரக்கோணம்:
திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் மர்ம ஆசாமி நகைகளைக்கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினான்.
திருத்தணி அருகே உள்ள உள்மேளன்சேரியைச் சேர்ந்த மணிரத்னம் என்பவரது மகள் செஞ்சுலெட்சுமி. இவர்திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
தினமும் திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயிலில்தான் இவர் வேலைக்குச் சென்று வருவார்.
நேற்று விடுமுறையாதலால் கூட்டம் குறைவாக இருந்தது. எப்போதும் போல் பெண்கள் பெட்டியில் அவர்ஏறியபோது, அதே பெட்டியில் ஒரு ஆண் உட்கார்ந்து இருந்ததை செஞ்சுலட்சுமி பார்த்தார்.
இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இவரும் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அப்பெட்டியில்மேலும் சில பெண் பயணிகள் இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த மர்ம நபர் திடீரென்று எழுந்து பெண் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி,அவர்களிடமிருந்து நகைகளைப் பறித்துக் கொண்டான். பின்னர் சிக்னலுக்காக ரெயில் மெதுவாகச் சென்றபோது,அவன் ரயிலில் இருந்து இறங்கித் தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து செஞ்சுலட்சுமி அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து தீவிரவிசாரணை நடத்தி தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications