உசிலம்பட்டி திருவிழாவில் பயங்கர கோஷ்டி மோதல்: 40 பேர் கைது
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் உள்படஏராளமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம். இங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுவருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. கிராமத்து மக்கள்அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரைத் தெளித்து சந்தோஷமாக நீராட்டு விழாவைக் கொண்டாடினர்.
அப்போது இரு பிரிவினருக்கிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாகமாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் பலருடைய மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது.
கலவரத்தை அடக்க முயன்ற போலீசார் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். காயமடைந்த போலீசார் உள்படஅனைவரும் ஏழுமலை மற்றும் உசிலம்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து கலவரக்காரர்களை சமாதானப்படுத்தினர். பின்னர்மோதலில் ஈடுபட்டவர்களை வீடு வீடாக சென்று போலீசார் கைது செய்தனர்.
இதுவரை இரு தரப்பினரையும் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடரும் என்று அச்சம்நிலவுவதால் அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications