வெற்றி நாதம் முழங்குமா திராவிட இசை முரசு?
சென்னை:
வாணியம்பாடி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக சார்பாக, "இசைமுரசு" என அன்புடன் அழைக்கப்படும் பிரபலஇஸ்லாமிய பாடகரான நாகூர் ஈ.எம். ஹனீபா போட்டியிடவுள்ளார்.
இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்லாது, திராவிட இயக்கப் பாடல்களையும் பாடி பெரும் புகழ் பெற்றவர் ஹனீபா.இவரது இசை முழக்கம் கேட்காத இஸ்லாமிய வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்கு ஹனீபா புகழ்பெற்றவர்.
"தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து மகிழ்வோம்", "அல்லாவை நாம் தொழுதால் புகழ் எல்லாமே ஓடி வரும்" என்றபாடல்களைக் கேட்காத காதுகளே தமிழகத்தில் கிடையாது. அனைத்து மதத்தினரையும் கவர்ந்த பாடல்கள் இவைஎன்பதுதான் இவற்றின் விசேஷம்.
அதுமட்டுமல்லாது அண்ணா காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்குவகித்தவர் ஹனீபா. ஹனீபாவின் வெண்கலக் குரலில் "உடன் பிறப்பே, கழக உடன்பிறப்பே" என்ற பாடல் ஒலிக்காததிமுக மேடைகளே கிடையாது.
சுமார் 40 ஆண்டுக் காலம் திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்துள்ள ஹனீபா, 60 வயதைத் தாண்டியநிலையிலும் இன்று வரை திமுக மேடைகளில் பாடல்கள் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "கலைமாமணி"உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஹனீபா பெற்றுள்ளார்.
நீண்ட காலமாக திமுகவின் வளர்ச்சிக்காக, திமுகவின் கொள்கைகளைத் தனது வெண்கலக் குரல் மூலம்பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வந்த ஹனீபாவுக்கு இதுவரை திமுகவில் முக்கியமான பொறுப்புக்கள் எதுவும்அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் வாணியம்பாடி தொகுதியில் சீட் கொடுத்துள்ளதன் மூலம் அவருக்கு சரியான கெளரவத்தைக்கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநதி.
வாணியம்பாடி தொகுதியில் கவிஞர் அப்துல் ரகுமான் போட்டியிடுவார் என்றுதான் முதலில் கூறப்பட்டு வந்தது.இந்த நலையில் ஹனீபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரில் யாரை நிறுத்தியிருந்தாலும் அது எதிர்க்கட்சிக்கு கடுமையான போட்டியையே கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
திமுக மேடைகளில் பாடல்கள் பாடிய அனுபவத்துடன் களம் இறங்கப் போகும் நாகூர் ஹனீபா, தேர்தலில் தனக்குஎதிராகப் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை எதிர்த்து எப்படி பிரசாரம் செய்யப் பாகிறார் என்பதுதெரியவில்லை.
ஆனால் நிச்சயம் ஹனீபாவின் பாடல்களுடன் வாணியம்பாடி தேர்தல் களை கட்டப் போகிறது என்பது மட்டும்உண்மை.
இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியம் என்பவர் போட்டியிடுவார் என்றும் கருணாநிதிஇன்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications