இனி பிராடுகள் தேர்தலில் போட்டியிட முடியாது
டெல்லி:
இனிமேல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவா என்பதுகுறித்தும், தங்களது சொத்து விபரம் மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்களை செய்து உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி. ஷா, பி.பி. சிங், எச்.கே. ஷேமாஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில்கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு வாக்கு அளிக்கும் மக்கள்தெரிந்து கொள்ள முழு உரிமை உண்டு. எனவே, பஞ்சாயத்துத் தேர்தல் முதல் எம்.பி தேர்தல் வரை எந்தத்தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி தங்களது முழு விவரத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர் மீது கிரிமினல் குற்றங்கள் இருந்தால் அதை முதலில் தெரிவிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல்செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் அவர் ஏதாவது குற்றங்களில் அல்லது கிரிமினல் வழக்குகளில்சம்பந்தப்பட்டாரா என்பது குறித்து தேர்தல் கமிஷனிடம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்கள், அவருடைய மனைவி, குழந்தைகள் பேரில் உள்ள சொத்துவிவரங்கள் அனைத்தையும் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க வேண்டும். திருமணமாகிச் சென்ற மகளின் மீதானசொத்து விவரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
வேட்பாளர் தன்னுடைய கல்வித்தகுதி என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் இரண்டு மாதங்களில் தயாரித்து வெளியிட வேண்டும்என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் கிரிமினல்களும், ஊழல் மூலம் பணம் சேர்த்த பெருச்சாளிகளும் தான் போட்டியிட்டு வெல்ல முடியும்என்ற கேடுகெட்ட நிலை நிலவி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்திய தேர்தல் முறையைநேர்மையாக்க கொஞ்சமாவது உதவி செய்யும் என்று நம்புவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications