காதுகள்-கண்களை மூடிக் கொண்டு வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை:
சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை பதில் அளித்துக் கொண்டிருக்கும்போது அதைப் புறக்கணிக்கும்விதமாக ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏவாக எழுந்து வெளியே சென்றனர்.
இதையடுத்து, இது என்ன அறிவிக்கப்படாத வெளிநடப்பா என்று சபாநாயகர் காளிமுத்து கேலியாக கேட்டார்.
சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் இடையே அமைச்சர் செம்மலைகுறுக்கிட்டுப் பேசுகையில், கருணாநிதி குறித்து சில கருத்துக்களைக் கூறினார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் எதுவும் கூறாமல், ஒவ்வொருவராகஎழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தனர். சிலர் கைகளால் காதுகளையும், கண்களையும் மூடிக் கொண்டுவெளியேறினர்.
திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறுவதைப் பார்த்த சபாநாயகர் காளிமுத்து, இது என்ன அறிவிக்கப்படாதவெளிநடப்பா என்று கேலியாகக் கேட்டார்.
சபையை விட்டு வெளியே வந்த திமுக எம்.எல்.ஏ. பொன்முடியிடம் இதுகுறித்துக் கேட்டபோது,
பிறகு என்னதான் செய்வது? ஏதாவது கேட்டால் பதில் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் திமுக தலைவர்கருணாநிதியை மறைமுகமாகத் திட்டுவார்கள். அரை மணி நேரம் இப்படி திட்டி விட்டு பிறகு 10 நிமிடத்திற்குப்பதில் அளிப்பார்கள்.
அதில் ஏதாவது விளக்கம் கேட்டால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பார். மத்தியான பசி நேரத்தில் இப்படிதேவையில்லாமல் உட்கார்ந்திருப்பதற்கு பதில், குழாயடி சண்டை போல அமைச்சர் பேசிக் கொண்டிருப்பதைகேட்டுக் கொண்டிருப்பதற்குப்பதில் வெளியேறி விடலாமே என்ற எண்ணத்தில்தான் வந்து விட்டோம் என்றார்பொன்முடி.
பிறகு திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications