மக்களவை சபாநாயகர் யார்? - நாளை தெரியும்
டெல்லி:
வரும் 10ம் தேதி மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜக இன்னும் தன்னுடையவேட்பாளரை அறிவிக்கவில்லை.
முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் இதுவரை சபாநாயகருக்கான வேட்பாளரைஅறிவிக்கவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில்இறந்ததையடுத்து, அக்கட்சிக்கே சபாநாயகர் பதவியை ஆளும் பாஜக அரசு ஒதுக்கியிருந்தது.
ஆனால் குஜராத் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்தே ஆகவேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி ஒற்றைக் காலில் நின்றதோடு, எதிர்க் கட்சிகள் கொண்டு வந்ததீர்மானத்தின்போது ஓட்டளிக்காமல் வெளிநடப்பு செய்து விட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் இந்தச் செயல்களையடுத்து, சபாநாயகர் பதவியைத் தன் வசமே எடுத்துக் கொள்ளபாஜக முடிவு செய்து விட்டது. அப்பதவி தங்களுக்கு வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் தெளிவாக அறிவித்து விட்டார்.
இதையடுத்து தங்களுடைய வேட்பாளரையே சபாநாயகர் தேர்தலுக்கு நிறுத்த பாஜக முடிவு செய்து விட்டது.ஆனால் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது பெரும் சிக்கல் நிலவி வருகிறது.
மத்திய அமைச்சர்கள் ராம்நாயக் மற்றும் ஜக்மோகன், பாஜகவின் மூத்த தலைவர் லக்ஷ்மி நாராயண் பாண்டேஆகியோர் தவிர பாஜகவின் செய்தித் தொடர்பாளரான மல்ஹோத்ராவின் பெயரும் சபாநாயகர் பதவிக்கு அடிபட்டுவருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து விட்டு, சபாநாயகருக்கானவேட்பாளர் பெயரை அறிவிக்கப் போவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இன்றுகூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியையும் அவர் இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.எப்படியும் நாளைக்குள் அடுத்த சபாநாயகர் யார் என்பதும் தெரிந்து விடும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications