சீன விமானம் விபத்து: இந்தியர் உள்பட 112 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

சீனாவின் தலியன் நகர் அருகே ஒரு விமானம் நொறுங்கி கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரு இந்தியர்உள்பட 112 பேரும் உயிரிழந்தனர்.

சீனா நார்த்தர்ன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த விமானம் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு (இந்திய நேரப்படி)பெய்ஜிங்கிலிருந்து தலியான் நோக்கிக் கிளம்பியது.

ஆனால் தலியானில் தரை இறங்குவதற்கு முன்பே இரவு சுமார் 7.10 மணிக்கு அந்த விமானம் அருகே உள்ளகடலில் நொறுங்கி விழுந்தது.

இந்த விமானத்தில் 9 விமான ஊழியர்களும் 103 பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமேஇறந்து விட்டனர் என்று தெரிகிறது.

இறந்தவர்களில் ஒருவர் இந்தியாவின் ஓரிண்ட் ரெப்ராக்டரீஸ் நிறுவனத்தின் ஜெனரல் மானேஜர் ராஜ்குமார் கோலேஎன்று தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் விரைவில் தன்னுடைய கிளையை அங்கே நிறுவவிருந்தது.அதற்காகத்தான் அவர் அங்கே சென்றதாகக் கூறப்படுகிறது.

விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்னர்விமானத்தில் தீப்பிடித்துள்ளதாக பைலட் கூறியுள்ளார்.

எகிப்து விமான விபத்தில் 15 பேர் பலி:

இதற்கிடையே எகிப்தில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். வேறு 49 பேர் படுகாயங்களுடன்உயிர் தப்பி விட்டனர்.

துனிஸ் விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் அந்த விமானம் அருகிலிருந்த ஒரு மலையில் மோதி வெடித்துச்சிதறியது.

மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+