வெற்றிகரமான 2வது ஆண்டு: அதிமுகவினர் கொண்டாட்டம்
சென்னை:
தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட்டு வரும் மே 13 ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடையும் நிலையில்,ஓராண்டு சாதனை விளக்கப் பொது கூட்டங்களை நடத்த முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே 10ம் தேதி தமிழக சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக அமோகமான வெற்றிபெற்று திமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
அப்போதைய தேர்தலின்போது போட்டியிட முடியாமல் எம்.எல்.ஏவாகக் கூட ஆகாமலிருந்த ஜெயலலிதா அதிமுகஎம்.எல்.ஏக்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரானார். அவசர அவசரமாக மே 14ம் தேதியேமுதல்வராகப் பதவியும் ஏற்றுவிட்டார்.
அதன்பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செப்டம்பர் 21ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்த ஜெயலலிதா,பின்னர் டான்சி வழக்கில் விடுதலையானதும் இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றிபெற்று, மார்ச் 2ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றதும், இடைப்பட்ட ஐந்து மாதமும் தற்போதையபொதுப்பணித்துறை அமைச்சரான பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததும் தனிக் கதை.
இந்நிலையில் வரும் மே 13ம் தேதியுடன் அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி முடிவடைகிறது. இந்த ஓராண்டில்அதிமுக ஆட்சி நடத்திய சாதனைகளைப் பற்றி விளக்க பொது கூட்டங்களை நடத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளாக விவசாயிகளுக்கு 311 கோடி ரூபாய்க்கு வசதிகள் செய்துதந்தது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு செய்த நலத்திட்ட உதவிகள், உயர்படிப்பு முடிக்கும் வரைஇலவச படிப்புதவி, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது, உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அமைத்ததுஉள்ளிட்ட பல திட்டங்களைக் குறிப்பிட்டு பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்குஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications