ஓட்டுப் போடும்போது சிந்திக்க மறந்த மக்கள்: கருணாநிதி வருத்தம்
சென்னை:
ஓட்டுப் போடுவதற்கு முன் ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் ஓட்டளித்த மக்கள் தற்போது அதன் பலனைஅனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் சமீப காலங்களில் முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது 1991 முதல் 1996 வரையிலான ஐந்து ஆண்டுகளிலும் ரூ.34,424கோடி மதிப்பிலான தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் சட்டசபையில் பேசிய அமைச்சர் இந்தக் காலகட்டத்தில் ரூ.90,650 கோடி செலவில் தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இந்த இரண்டில் எது உண்மை?
இதேபோல் தற்போது முரட்டுத்தனமான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. பிளாஸ்டிக்பொருட்களை வைத்திருந்தாலே குற்றம் என்று சட்டம் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
ஓட்டுப் போடுவதற்கு முன்பாக ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் ஓட்டளித்ததன் விளைவைத்தான் மக்கள் தற்போதுஅனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான். என்றாலும்அப்பொருட்களுக்கு ஒரேயடியாகத் தடை விதிக்காமல், படிப்படியாகத் தடை விதிப்பதே சரியானது.
வசதி படைத்தவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் எளிதில் மற்ற விலை உயர்ந்தஉலோகத்திலான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் ஏழைகள் மாற்றுப் பொருட்களை வாங்குவதற்கு என்ன செய்வார்கள் என்பதை இந்த அதிமுக அரசு ஒருநிமிடம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications