பொது நுழைவு தேர்வு: பெங்களூரில் குவிந்த தமிழக மாணவர்கள்
பெங்களூர்:
கர்நாடகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ, இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேருவதற்கு இன்றும் நாளையும் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி) நடக்கிறது.
இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெங்களூரில் குவிந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழக மாணவர்கள்தான்.இந்த மாணவர்களின் வருகையால் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நுழைவுத் தேர்வுக்கு 1,52,847 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் 79,027 விண்ணப்பங்கள் வெளி மாநிலங்களில்இருந்து வந்தவை.
கர்நாடகாவில் மொத்தம் 317 மையங்களில் தேர்வு நடக்க இருக்கிறது. பெங்களூரில் மட்டும் 160 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த 160 மையங்களில் மட்டும் 64,000 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவ, மாணவியர் தேர்வு மையங்களை சுலபமாக அறிய சுற்றுலாத்துறையினர் வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.3,000மாணவ மாணவியர் தங்க வசதியும் செய்து கொடுத்துள்ளனர். மத்திய ரயில் நிலையத்தின் ஓய்வு அறையிலும் மாணவ,மாணவியர் தங்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வையொட்டி 10 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் 80 கூடுதல் மாநகர பேருந்துகள்இயக்கப்படுகின்றன. இவை மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த கூடுதல் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை வரை செயல்படும்.
ஆனால், பெங்களூரில் பஸ்களை நம்பி எந்த வேலையும் செய்ய முடியாது என்பதால் அனுபவசாலிகள் ஆட்டோக்களில் தான்தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.
நுழைவுத் தேர்வு குறித்து மைய அதிகாரி பி.எஸ்.ராம் பிரசாத் கூறுகையில்,
மாணவர்கள் நுழைவுச் சீட்டில் பெயரில் எழுத்து மாற்றங்கள் இருந்தாலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.மாணவர்களின் போட்டோவை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
கர்நாடக மின்சார வினியோகக் கழகத்தினர் இரண்டு நாட்களுக்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மின்சாரத் தடைஏற்பட்டால் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றார்.
பெங்களூரில் நாளொன்றுக்கு குறைந்தது 4 மணி நேரமாவது மின்தடை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications