கோயில்களைத் தகர்க்க சதி: 6 முக்கிய தீவிரவாதிகள் சிக்கினர்
சேலம்:
தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களை வெடிகுண்டு மூலம் தாக்க திட்டமிருந்த 6 தீவிரவாதிகளை சேலம் மாவட்ட போலீசார்கைது செய்துள்ளனர். இவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தீவிரவாதி இமாம் அலியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்என்று தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு குண்டு வைத்த வழக்கில் கைதாகியிருந்த தீவிரவாதிகள் இமாம் அலி, ஹைதர் அலி ஆகியோர்மதுரை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பியோடினர்.
ஆனால் ஹைதர் அலி சில நாட்களில் பிடிபட்டுவிட்டான். இமாம் அலி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறான்.இவனைப் பிடிக்க பல்வேறு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ரகசியமாய் தேடி வருகின்றன.
வெடிகுண்டு நிபுணனான இமாம் அலியினால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க, முக்கியக் கோயில்களுக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திடீர் திடீரென ரயில்கள் நிறுத்தப்பட்டும், வானகனங்கள்நிறுத்தப்பட்டும் சோதனைகள் நடந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 6 மர்ம ஆசாமிகள் சிக்கினர்.அவர்களை விசாரிக்க சேலம் உதவி கமிஷ்னர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களை தனி செல்லில் வைத்து சரியான கவனிப்பு நடத்தி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது இவர்கள் தந்த தகவல் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளகோயில்களைத் தகர்க்க திட்டமிட்டிருந்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பாண்டிச்சேரியில சில கோயில்களை வெடி வைத்து தகர்த்திலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில்தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாண்டிச்சேரி போலீசாருக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து ஒரு ஸ்பெஷல் டீம் சேலம் வந்திறங்கியுள்ளது.இவர்களும் இந்தக் கும்பலிடம் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் இமாம் அலியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications