இலங்கை அமைதி பேச்சுவார்த்தை தாமதமாகுமா?
கொழும்பு:
போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடிவடைந்த பின்னரே தாய்லாந்தில் நடக்கவுள்ள அமைதிப்பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று இலங்கைப் பிரதர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இம் மாதம் 24ம் தேதியோடு போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடிவடையப் போகிறது.
நார்வே நாட்டு முயற்சியால் அமலுக்கு வந்தது இந்தப் போர் நிறுத்தம். இப்போது அதே நாட்டின் உதவியோடுஇலங்கை அரசின் பிரதிநிதிகளும் புலிகளும் தாய்லாந்தில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். அடுத்த மாதம் இந்தப்பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
இந் நிலையில் இன்னும் பேச்சுவார்த்தைக்கான நாள் குறிக்கப்படவில்லை. இது குறித்து சண்டே டைம்ஸ் இதழுக்குரணில் கொடுத்துள்ள பேட்டியில்,
போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடியட்டும் என்று காத்திருக்கிறோம். இதன் பின்னர் தான்பேச்சுவார்த்தைக்கான தேதி இறுதி செய்யப்படும். பெரும்பாலும் ஜூன் 3வது வாரத்தில் இந்தப் பேச்சுக்கள்தொடங்கலாம் என்றார்.
ஜூன் 2வது வாரத்தில் ரணில் இந்தியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைகள்குறித்து அவர் இந்தியத் தலைவர்களிடம் விளக்குவார்.
அதற்கு முன்னதாக இம்மாத இறுதியில் பிரிட்டின் சென்று பிரதமர் டோனி பிளேரைச் சந்தித்து இந்த விவகாரம்குறித்துப் பேசவும், ஐரோப்பிய யூனியன் தலைவர் ரோமனா புரோடியுடன் பேச்சு நடத்தவும் ரணில் முடிவுசெய்துள்ளார்.
தாய்லாந்தில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் வட-கிழக்குப் பகுதியில் இடைக்கால சுயாட்சி கொண்ட அரசுஅமைப்பது குறித்து மட்டுமே பேசப்பட வேண்டும் என புலிகள் கூறி வருகின்றனர். ஆனால், இலங்கை அரசோஇனப் பிரச்சனை, ஆயுதங்கள், அரசியல் தீர்வு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் முழு அளவில் பேச்சுநடத்த வேண்டும் என்கிறது.
மேலும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தங்கள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும், போர் நிறுத்தஒப்பந்ததில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் அமலாக்க வேண்டும் என்று புலிகள் நிபந்தனையும்விதித்துள்ளனர்.
இதற்கு அந் நாட்டு அதிபர் சந்திரிகாவும் அரசுக்கு ஆலோசனை கூறி வரும் மூத்த புத்த மத ஆலோகர்களும்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராணுவமும் இதை எதிர்த்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்தநிபந்தனைகளை விக்கிரமசிங்கேயால் நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் என்று கூட கருதப்படுகிறது. இதனால் தான் தாய்லாந்துபேச்சுவார்த்தை தேதியை இறுதி செய்ய முடியாமல் ரணில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் தாமதமடைவதைத் தவிர்க்க நார்வே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications