சென்னை மேயர் பதவிக்கு "குட்-பை" சொல்கிறார் ஸ்டாலின்?
சென்னை:
சென்னை மாநகர மேயரான மு.க.ஸ்டாலின் தனது பதவி குறித்து விரைவில் முடிவு செய்ய வேண்டியநிர்ப்பந்தத்தில் உள்ளார்.
பிரேசில் நாட்டிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்பும் ஸ்டாலின் விரைவில் தனது பதவி குறித்துமுடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நபர் ஒரு அரசுப் பதவி மட்டுமே வகிக்க முடியும் என்ற சட்டம் தமிழக சட்டசபையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் கையெழுத்து போட்டு விட்டால், உடனடியாக அதுஅமலுக்கு வந்து விடும். சட்டசபையில் இம்மசோதா நிறைவேறி விட்டதால், ஆளுநர் விரைவில் கையெழுத்துப்போட்டுவிடுவார் என்று தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியின் எம்.எல்.ஏவுமாகவும் இருக்கும் ஸ்டாலினை குறி வைத்துக்கொண்டுதான் இந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டதாகப் பேசப்படுகிறது.
எனவே ஸ்டாலின் இனி ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டாலின்என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது.
இதற்கிடையே, திமுக தரப்பில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரும் ஐடியாவும் இருக்கிறதாம். இந்தசட்டம், சட்டவிரோதமானது என்று கோரி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடம் ஏற்கனவே திமுக தரப்பு மனுகொடுத்துள்ளது. அது தொடர்பாக ஜனாதிபதி என்ன செய்யப் போகிறார் என்றும் வெகு ஆவலாக திமுகவினர்எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஸ்டாலின் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். எனவே நெருக்கடி ஏற்படும்சூழ்நிலை உருவானால் சென்னை மேயர் பதவியைத்தான் அவர் ராஜினாமா செய்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியும் ஒரு மேயராக தன்னை ஒழுங்காக வேலை செய்ய அதிமுகவினர் அனுமதிக்கப் போவதில்லை என்றவிரக்தியில் ஏற்கனவே இருக்கிறார் ஸ்டாலின். எனவே மேயர் பதவியை ராஜினாமா செய்து விடும்எண்ணத்தில்தான் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மேயர் பதவியை ராஜினாமா செய்வதின் மூலம், அதிமுகவினரை எக்ஸ்போஸ் செய்ய முடியும் என்றும்ஸ்டாலின் நனைக்கிறார்.
தனது காலத்தில் சென்னை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை மக்கள் நன்றாகஉணர்ந்துள்ளனர் என்றும் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி எந்த அளவுக்கு மோசமாக உள்ளதுஎன்பதையும் அவர்கள் நன்கு அனுபவித்து வருகிறார்கள் என்றும் எனவே அதிமுக கையில் மாநகராட்சி நிர்வாகம்இருந்தால், கண்டிப்பாக சென்னையில் அதிமுகவுக்கு எதிராக பெரும் அதிருப்தி அலை எழும் என்றும் ஸ்டாலின்நினைக்கிறார்.
எனவே பல்வேறு விஷயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்து, தனது மேயர் பதவி குறித்து ஸ்டாலின் விரைவில்முடிவு செய்வார் என்று தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications