பிரபாகரனைப் பிடிக்கும் தீர்மானம் தேவையா? ஜெ. மீது வைகோ பாய்ச்சல்
பாண்டிச்சேரி:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு ராணுவத்தைஅனுப்ப வேண்டும் என தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிகக் கடுமையாகவிமர்சித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக உருவாக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி பாண்டிச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில்வைகோ பேசினார். இக் கூட்டத்தில் பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய வைகோ கூறியதாவது:
நார்வே நாட்டின் மனிதாபிமான முயற்சியால் இன்று இலங்கையில் அமைதி ஏற்படும் நல்ல சூழல்ஏற்பட்டிருக்கிறது. உலகமே இன்று இலங்கையை நோக்கி தனது பார்வையைப் பதித்துள்ளது.
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு நல்ல உள்ளமும் நினைக்கிறது. அங்கே இன்னலுக்குஉள்ளான தமிழினம் விடியலைக் காண வேண்டும் என்று அனைவரும் ஏங்கும் இந்த நேரத்தில் பிரபாகரனைப்பிடிக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தேவைதானா?
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்கினார்களே.அப்போது இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் போட்டாரா ஜெயலலிதா?இல்லை பாண்டிச்சேரி சட்டசபையில் தான் அப்படிப்பட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டதா?
இந்திய பாதுகாப்புப் படைகளின் மிகச் சிறப்பான பதிலடியால் அன்று ஏற்படவிருந்த பெரும் சேதம்தவிர்க்கப்பட்டது.
கலைஞர் அவர்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கவிவகாரத்தில் பிரதமரைச் சந்தித்துப் பேசி அதைக் காப்பாற்றினேன். ஆனால், கருணாநிதியோ அந்த விவகாரத்தில்வாயே திறக்கவில்லை என்றார் வைகோ.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications