வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்கினார் ஜெ.
சென்னை:
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு தமிழர்களுக்கு ஆயுள்கால மற்றும் மருத்துவஇன்சூரன்ஸ் பாலிசிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் தமிழர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்புமற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கும் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்" என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு சமீபத்தில் ஒப்பந்தம்செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், விபத்து காரணமாக ஏற்படும் மரணம் அல்லது ஊனத்துக்கான இன்சூரன்ஸ் மற்றும் விபத்துஅல்லது நோய் காரணமாக இந்தியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான இன்சூரன்ஸ்ஆகிய இரு காப்புறுதிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் ஒரு முறை மட்டும் பிரீமியத் தொகை செலுத்தி, அடுத்து வரும் ஐந்துஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான பாதுகாப்பைப் பெறலாம்.
இந்தப் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குவைத்தில் வேலை பார்க்கும்முகமது இப்ராஹிம், சவூதியில் வேலை பார்க்கும் மங்கலசாமி, காளிமுத்து, மலைசிங்கம், பஹ்ரைனில் வேலைபார்க்கும் குமார், வேல்முருகன் ஆகியோர் நேற்று ஜெயலலிதாவிடமிருந்து இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெற்றுக்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications