பஸ் மீது கண்மூடித் தாக்குதல்: 7 பயணிகள் பலி
ஜம்மு:
ஜம்மு அருகே இன்று அதிகாலை ஒரு பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 7 பயணிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூவிலிருந்து ஜம்மூ நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சம்பாஅருகே இந்த பஸ்சில் 3 தீவிரவாதிகள் ஏறினர். இவர்கள் ராணுவ உடையில் இருந்தனர். கையில் ஏ.கே.-47 ரகதுப்பாக்கிகளையும் கிரனைட்களையும் வைத்திருந்தனர்.
இதனால் இவர்களை ராணுவத்தினர் என பயணிகளும் டிரைவர் கண்டக்டரும் நினைத்தனர்.
பஸ்ஸை ஜம்மூவிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள கலூச்சக் என்ற இடத்துக்கு ஓட்டுமாறு டிரைவருக்குஉத்தரவிட்டனர். இதையடுத்து அவர் பஸ்ஸை அந்தப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
ஜம்மூ-பதான்கோட் நெடுஞ்சாலையில் கலுச்சாக் என்ற இடத்தில் பாலத்தை இந்த பஸ் இன்று காலை 5.30 மணிக்குஅடைந்தது. அப்போது பஸ்ஸை நிறுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து பஸ்சில் இருந்து அனைவரையும்இறங்குமாறு உத்தரவிட்டனர்.
பயணிகள் எழுந்து இறங்க ஆரம்பித்தபோது ஒரு தீவிரவாதி பஸ்சின் முன் வாயிலில் போய் நின்றான்.இன்னொருவன் பின் வாயிலில் போய் நின்றான். இன்னொருவன் இறங்கிக் கொண்டான்.
திடீரென இந்த தீவிரவாதிகள் பயணிகள் மீது கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். இதனால் தூக்கத்தில் இருந்தபயணிகள் அலறிக் கொண்டு எழுந்தனர். ஆனால், அவர்களில் 7 பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இறையாயினர்.மற்றவர்கள் சீட்களுக்கு அடியில் பதுங்கியதால் உயிர் தப்பினர்.
தாக்குதலில் டிரைவரும் தனது சீட்டிலேயே குண்டடி பட்டு சறிந்தார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ் முழுவதும் ஒரே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும்என்று தெரிகிறது.
பின்னர் அந்த பஸ்சின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு ஓடி விட்டனர். இதனால் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்துநொறுங்கின. பயணிகள் மேலும் காயமடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்த ராணுவக் குடியிருப்பின் காவலாளியை சுட்டுக் கொன்றுவிட்டு சுவர் ஏறிக் குதித்துகுடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இச் சம்பவத்தையடுத்து ஜம்மூ முழுவதும் ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வரும் அக்டோபரில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications