ராணுவ குடியிருப்பில் தற்கொலை படை தாக்குதல்: 22 வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு அருகே இன்று அதிகாலை ஒரு பஸ் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகள்,அருகிலிருந்த ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்து பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இதில் 22 ராணுவ வீரர்களும்அவர்களுடைய குடும்பத்தினர் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹிமாச்சலிலிருந்து ஜம்மு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சை கலுச்சாக் என்ற இடத்தில் வழிமறித்து தாக்கியதீவிரவாதிகள், அதிலிருந்த ஏழு பயணிகளைச் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் பஸ்சிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள், கே.பி. லைன்ஸ் அருகில் உள்ள கலூசக் ராணுவ முகாமிற்குள்புகுந்தனர். இந்த ராணுவ முகாமிற்குள் ராணுவத்தினரின் குடியிருப்பும் உள்ளது.
இந்தக் குடியிருப்பின் கேட்டில் நின்றிருந்த காவலாளியின் மீது கிரனைட் குண்டை வீசினர். இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு உள்ளே இருந்த வீடுகளுக்குள் புகுந்தனர்.
அங்கே தூங்கிக் கொண்டிருந்த ராணுவத்தினர் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் தீவிரவாதிகள்கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தீவிரவாதிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலால் அதிர்ந்துபோன அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து ஜம்முவிலிருந்து ஏராளமான போலீசாரும் சிறப்பு ராணுவ கமாண்டோக்களும் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது இரு தரப்பிலும் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகள் தாக்குதலில் 22 ராணுவவீரர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
வீடுகளைச் சுற்றி வெடிகுண்டுகளைக் கட்டியும் வெடிக்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
ராணுவக் குடியிருப்புக்குள் சென்று இந்தத் தீவிரவாதிகள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயங்கரத் தாக்குதலில் மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications