பாக். தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு அருகே இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-மசூரான் மற்றும்ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியதில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா என்றதீவிரவாத அமைப்புடன் நெருக்கமாக உள்ள அமைப்புதான் அல்-மசூரான்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய 4 பேர் மீது இன்று தான் டெல்லிநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகலில் இந்தகுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டிக் கூட தாக்குதல் நடந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது.

அல்-மசூரான் அமைப்பைச் சேர்ந்தவன் என்று தன்னைக் கூறிக் கொண்ட இர்பான் காஷ்மிரி என்பவன்,தங்களுடைய அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியது என்று டெலிபோன் மூலம் ஒரு செய்தி நிறுவனத்திடம்கூறினான்.

உயிரிழந்த தீவிரவாதிகளின் பெயர்கள் அபு மஜித், அபு ஜாபர் மற்றும் அபு ஷெல் என்றும் அவன் அப்போதுதெரிவித்தான்.

இதற்கிடையே ஜமாத்-உல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் தான் காரணம்: பரூக்

இந்நிலையில் ஜம்முவில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றுகாஷ்மீர் முதல்வரான பரூக் அப்துல்லா கூறினார்.

தாக்குதல் சம்பவம் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எல்லை வழியாக ஏராளமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வைத்து இவ்வாறு தாக்குதலை நடத்துமாறுஏவி விட்டுள்ளது. எனவே இந்தத் தாக்குதல்களுக்கு முழுக்க முழுக்க பாகிஸ்தான் மட்டுமே காரணம்.

நடத்தப்பட்ட தாக்குதல்களின் தீவிரத்தை வைத்துப் பார்க்கும்போது, பலியானவர்களின் எண்ணிக்கை 50க்கும் மேல்அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சரான கிறிஸ்டினா ரோக்கா தற்போது இந்தியா வந்துள்ளதற்கும்இந்தத் தாக்குதல்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றார் பாரூக்.

இதற்கிடையே ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் பரூக் தலைமையில் பாதுகாப்புக் குழு அவசரமாகக் கூடியுள்ளது.இன்று நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பரூக் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.

முன்னதாக சம்பவம் நடந்த ராணுவக் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பரூக், தாக்குதலில்உயிரிழந்த ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ராணுவ மருத்துவமனைக்கும் சென்ற அவர்,காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவருமே ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ராணுவக்குடியிருப்பில் தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் உள்ளே இருந்த பல ராணுவலாரிகளும் தீப் பிடித்து எரிந்தன.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பரூக் அப்துல்லா அரசு பதவி விலக வேண்டும்என்ற சிவ சேனா கட்சி வற்புறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+