அமெரிக்கா கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜம்மூ அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சரான கிறிஸ்டினாரோக்கா, இது ஒரு மிருகத்தனமான தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.
இதுபோன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் உலக நாடுகள் முயன்றுவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா இந்தத் தாக்குதலை மிக வன்மையாகத் தண்டிக்கிறது என்றும் ரோக்கா கூறினார்.
முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளின்ட்டன் கடந்த முறை இந்தியாவிற்கு வந்த போதும் இதுபோலவேகாஷ்மீரில் 35 சீக்கியர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தற்போதும் ஒரு அமெரிக்க அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் காஷ்மீரில் இந்தத் தாக்குதல்நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications