காஷ்மீரில் ராணுவ குடியிருப்பு மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 34 பேர் பலி
ஜம்மு:
ஜம்மு அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மீதும், ராணுவ குடியிருப்பு மீதும் தீவிரவாதிகள்நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 22 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹிமாச்சலிலிருந்து ஜம்மு நோக்கி இந்த பஸ் வந்து கொண்டிருந்தது. ஜம்முவுக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ளகலுச்சாக் என்ற இடத்தில் இந்த பஸ் இன்று காலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று அதை சிலதீவிரவாதிகள் வழிமறித்தனர்.
பின்னர் பஸ்சிற்குள் ஏறி அங்கிருந்த பயணிகள் மீது சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில் ஏழுபயணிகள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
பஸ் முழுவதும் ஒரே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும்என்று தெரிகிறது.
இதற்கிடையே பஸ்சில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அருகில் இருந்த ராணுவ முகாமிற்குள்ளும் புகுந்தனர்.இந்த ராணுவ முகாமிற்குள்தான ராணுவத்தினரின் குடியிருப்பும் உள்ளது.
இந்தக் குடியிருப்புக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.தீவிரவாதிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போன அங்கிருந்த இந்திய ராணுவத்தினர், உடனடியாகப்பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து ஜம்முவிலிருந்து ஏராளமான போலீசாரும் சிறப்பு ராணுவ கமாண்டோக்களும் சம்பவஇடத்திற்கு விரைந்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 22 ராணுவ வீரர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் 2பேரும் மற்றும் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிதாயீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் இந்தப் படுபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.பாகிஸ்தானிலிருந்து எல்லை வழியாக ஜம்முவுக்குள் ஊடுருவித்தான் அவர்கள் இந்தத் தாக்குதலைநடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராணுவக் குடியிருப்புக்குள் சென்று இந்தத் தீவிரவாதிகள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயங்கரத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50க்கும் மேல்அதிகரிக்கக் கூடும் என்று காஷ்மீர் முதல்வரான பரூக் அப்துல்லா கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சரான கிறிஸ்டினா ரோக்கா நேற்றிரவுதான் இந்தியாவுக்குவந்துள்ளார். இந்நேரத்தில் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது இன்றுதான்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications