சேலத்தில் ஊனமுற்ற பெண் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தின் வீட்டில் தனியே இருந்த ஊனமுற்ற பெண்ணை கற்பழித்த பக்கத்து வீட்டுக்காரரின் மீது, அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.

சேலம், பழைய சூரமங்கலத்தில் உள்ள பெரியார் தெருவில் வசித்து வரும் வாசியப்பன் என்பவரின் மகள்மகேஸ்வரி (30). இவர் இரு கால்களும் ஊனமுற்றவர்.

சமீபத்தில் மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லதம்பி என்பவர் வந்துமகேஸ்வரியை கதற கதற கற்பழித்தான்.

அப்போது அண்டை வீடுகளிலும் யாருமில்லாத காரணத்தால் மகேஸ்வரி என்னதான் கதறினாலும் பலனில்லாமல்போனது.

இந்நிலையில் வேலை முடிந்து வந்த தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விஷயத்தை மகேஸ்வரி கூறி கதறிஅழுதுள்ளார்.

இதையடுத்து மகேஸ்வரியின் பெற்றோர் நல்லதம்பியிடம் போய் நியாயம் கேட்டனர். அதற்கு அவன், போலீசில்புகார் செய்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரியின் பெற்றோர், மகேஸ்வரியை கைகளிலேயே தூக்கிக் கொண்டு, சேலம்மாவட்ட கலெக்டரிடம் சென்று அழுது கொண்டே புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன், அந்தப் புகார் மீதான விசாரணையை உடனடியாக நடத்தி,உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மகேஸ்வரி மருத்துவப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+