முக்கிய இடங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
வேலூர்:
இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை மனித வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் தகர்க்க சதிசெய்திருப்பதாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற இடங்களுக்குக்கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைத்தகர்க்க 25 மனித வெடிகுண்டுகளை அனுப்பியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உளவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளஅனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் இதே போன்ற கடிதம் உளவுத்துறையால் அனுப்பப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பிக்கள் எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோவில், வேலூர் கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும்உள்ள நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர தமிழகத்தில் உள்ள முக்கிய ராணுவத் தளங்கள், கடற்படை மற்றும் விமானப் பயிற்சித் தளங்கள்,விமான மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகியவற்றிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications