உடும்பு பிடிக்க புற்றுக்குள் கையை விட்டவர் பாம்பு கடித்து சாவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உடும்பு பிடிப்பதற்காகப் புற்றுக்குள் கையை விட்டவரின் கையை அதிலிருந்த பாம்புகடித்ததால் அவர் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னக் கோட்டக் குப்பத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (26). இவருக்குத் தொழிலே உடும்புபிடிப்பது தான்.

சமீபத்தில் இவர் வானூர் பகுதிக்கு உடும்பு பிடிப்பதற்காகச் சென்றார். அங்குள்ள வயல் பகுதிகளில் உடும்பைத்தேடி ஒவ்வொரு புற்றாக நோட்டமிட்டார் ஆனந்த்.

அப்போது ஒரு உடும்பு புற்றை நோக்கிச் செல்வதை ஆனந்த் பார்த்தார். உடனே அவர் சத்தமில்லாமல் அந்தஉடும்பைப் பின் தொடர்ந்தார்.

ஆனந்த்துக்குத் தெரியாமல் அந்த உடும்பு வேறொரு புற்றுக்குள் நுழைந்து விட்டது. இதைக் கவனிக்காத அவர்முதல் புற்றில் கையை விட்டு உடும்பைத் தேடினார்.

ஆனால் அந்தப் புற்றுக்குள் பாம்புதான் இருந்தது. யாரோ கையை உள்ளே விடுகிறார்கள் என்று தெரிந்தவுடன்அந்தப் பாம்பு ஆனந்த்தின் கையைக் கடித்து விட்டது.

பாம்பு கடித்ததையடுத்து அலறிக் கொண்டே கையை உதறிக் கொண்டு எழுந்தார் ஆனந்த். ஆனால் அதற்குள்பாம்பின் விஷம் மளமளவென்று அவருடைய உடம்பில் பரவியதில் வாயில் நுரை தள்ளி அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்த்தை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+