அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக்க யோசனை
டெல்லி:
அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவு செய்ய பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் அடுத்தவாரம் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அதிமுக, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிகட்சி, லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆகியவை பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் பிரபல விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் எனசமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் வாஜ்பாயைநேரில் சந்தித்துப் பேசினார்.
அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நடக்கும் கூட்டத்தில் ஜோதிபாசு, ஹர்கிசன் சிங் சுர்ஜித் போன்றமூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்என்று கோரி வருகின்றன.
காங்கிரஸ் முதலில் நாராயணனை ஆதரிப்பதாகக் கூறியது. ஆனால், இன்று யாரை ஆதரிப்பது என இன்னும் முடிவுசெய்யவில்லை என்று அறிவித்துவிட்டது.
பா.ஜ.க. மகாராஷ்டிர ஆளுநர் அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க விரும்புகிறது.
வரும் ஜூலை 24ம் தேதி ஓய்வு பெறவுள்ள நாராயணன் மீண்டும் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாகஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஊட்டியில் உள்ள அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர்நிருபர்களிடம் பேசுகையில்,
நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications