ஷார்ஜா-கோழிக்கோடு விமான டயர் வெடித்தது
கொச்சி:
ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், கொச்சியில் உள்ள நெடும்பசேரிவிமான நிலையத்தில் தரையிறங்கும் போது அவற்றின் டயர் வெடித்த போதிலும், அதிலிருந்த 200க்கும் மேற்பட்டபயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
முன்னதாக கோழிக்கோட்டில் இறங்க வேண்டிய அந்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாகநெடும்பசேரிக்குத் திருப்பி விடப்பட்டது.
நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த ஐ.சி.-598 ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின்டயர்களில் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
ஆனாலும் சமயோஜிதமாகச் செயல்பட்ட விமானி மற்ற சக்கரங்களின் உதவியுடன் விமானத்தை மெதுவாகத் தரைஇறக்கி நிறுத்தினார்.
விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டனர். அவர்களில் பலர் உடனடியாககார்கள் மூலம் கோழிக்கோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பின்னர் வேறு விமானம் மூலம் மீண்டும்கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நெடும்பசேரி விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. கொச்சிக்கு வரும் விமானங்கள்அனைத்தும் உடனடியாகத் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து மும்பை-கொச்சி விமானம் திருவனந்தபுரம்விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பெங்களூர்-கொச்சி விமானம் மீண்டும் பெங்களூருக்கே திருப்பிவிடப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து கொச்சியிலிருந்து மஸ்காட்டுக்குச் செல்ல வேண்டிய ஓமன் ஏர்வேஸ் விமானங்கள்உள்பட மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications