திருட்டுத்தனமாய் மின்சாரத்தை உறிஞ்சும் அதிமுகவினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக வந்துள்ள நிலையில் மைக்செட், டியூப் லைட்,மின் விளக்கு அலங்காரம் என அனைத்துக்கும் அதிமுகவினர் திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவே நேரடியாகவே போட்டியிடுவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவேமுதல்முறையாகும்.
இங்கு கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார். இன்றும் அங்கு அவரது பிரச்சாரம்தொடர்கிறது.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலஙகரிக்கப்பட்டுள்ளன. எங்குநோக்கினும் சீரியல் செட், மின் விளக்குகளால் இரட்டை இலை அலங்காரம்,ஜெயலிலாதாவின் படங்கள், அதைச்சுற்றி விளக்குகள் என தகதகக்கிறது வாணியம்பாடி.
இது போதாதென்று ஏகத்துக்கும் மைக்-செட்டுகள். அதில் எம்.ஜி.ஆர். பாடல்கள், ஜெயலலிதாவின் பேச்சுகள்ஆகியவை தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகின்றன.
இந்த மின் ஜொலிப்பு, ஓலிப்பு இதற்கெல்லாம் மின்சாரம் திருட்டுத்தனமாக உறிஞ்சப்பட்டு வருகிறது.
மின் கம்பங்களில் இருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து உபயோத்து வருகின்றனர் ஆளும் அதிமுகவினர்.பல்வேறு மின் கம்பங்களிலும் ஹை-டென்சன் வயர்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டுவருகிறது.
நாளொன்றுக்கு பல லட்சம் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டு வருகிறது. வழக்கமாக தமிழகத்தின் எல்லாபகுதிகளையும் போல வாணியம்பாடியிலும் தினமும் 4 மணி நேரம் மின் தடை ஏற்படுவது வழக்கம்.
ஆனால், ஜெயலலிதா இந்தப் பகுதியில் சுற்றுப் பிரயாணத்தில் இருப்பதால் தடையில்லாத மின்சாரம் வழங்கிவருகிறது தமிழக மின்துறை.
இது மின்சாரத்தை உறிஞ்சும் இப் பகுதி அதிமுகவினருக்கு வரப் பிரசாதமாகிவிட்டது.
உறிஞ்சித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல திமுக ஆட்சியில் இருந்தபோது அவர்களும் இதைச்செய்யத் தவறியதில்லை.
வாடகை தராமல் டபாய்க்கும் அதிமுக:
வாணியம்பாடி அடங்கிய அதே வேலூர் மாவட்டத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் தான் அதிமுக அலுவலகம் இயங்தகி வருகிறது.
ஆனால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகைத் தொகையை செலுத்தாமல் டபாய்த்து வருகிறது. அதிமுகவிடம் இருந்து எப்படி வாடகை வசூலிப்பது என்றதெரியாமல் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கிப் போயுள்ளது.
வேலூர் நகராட்சிக்கு சொந்தமானதுசாரதி மாளிகை. இங்கு மொத்தம் 70க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பல்வேறு நிறுவனங்கள், வர்த்தகநிறுவனங்கள் வாடகைக்கு அறைகள் எடுத்துள்ளன. அதேபோல, அதிமுகவும் ஒரு அறையை எடுத்து அலுவலகம் நடத்தி வருகிறது.
அக் கட்சியின் எம்.எல்.ஏ. நீலகண்டன் தான் இந்த அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு முதல் இந்த அறைக்கு வாடகை கொடுக்கப்படவில்லை. இப்போது வரை ரூ. 35,000 அளவுக்கு வாடகைப் பாக்கி சேர்ந்துள்ளது.வாடகைத் தொகையை வசூலிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எம்.எல்.ஏ. தரப்பில் இதுவரை பதிலே வரவில்லை.
திமுக ஆட்சியிலும் வாடகை தராமல் இருந்துள்ளது அதிமுக. எப்படி இதை திமுக அனுமதித்தது என்று தெரியவில்லை.
இதையே ஒரு பொது ஜனம் செய்திருந்தால் விட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications