இந்திய தாக்குதலில் 6 பாக் வீரர்கள் பலி
ஜம்மூ:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானின் பதுங்குக் குழிகள் மீது இந்தியா நடத்திய பீரங்கித் தாக்குதலில் 6பாகிஸ்தானிய வீரர்கள் இறந்தனர். 10 பதுங்குக் குழிகள் அழிக்கப்பட்டன.
எல்லைப் பகுதியில் இருந்த ஹர்கத்-உல்-முஜாகிதீனின் வயர்லெஸ் தொலைத் தொடர்பு கோபுரமும்தரைமட்டமாக்கப்பட்டது.
பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் இரு தரப்பினரும் மிக பயங்கர தாக்குதலில்ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலில் எல்லையில் மேய்ந்து கொண்டிருந்த பல மாடுகள் பலியாகியுள்ளன.பாகிஸ்தான் படையினர் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இதனால் இதுவரை எல்லைப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த 1.4 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவருகின்றனர். இவர்களில் பல குடும்பத்தினர் இந்திய ராணுவ முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காரி-கர்மரா பகுதியில் இன்று அதிகாலையில் பல பாகிஸ்தானிய பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
இந் நிலையில் மேலும் ஒரு ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மஞ்ச்கோட்என்ற இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தினர். இதில்ஒரு இந்திய வீரர் இறந்தார்.
அதே போல தோடா மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்து மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த சிறப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு வீரர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.
தோடா மாவட்டத்தின் லக்கந்தர் என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப் படையினரும் இந்தோ-திபெத் எல்லைப்போலீசாரும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தியபோது தப்பியோடிய ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிசெளகத் ஹீசைன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கம்யூனிஸ்ட்களுடன் வாஜ்பாய் பேச்சு:
இதற்கிடையே இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாய் இன்று ஆலோசனைநடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் அவர் நேற்று எல்லை நிலவரம் குறித்துப் பேசினார். இன்றுகம்யூனிஸ்ட்களுடன் ஆலோசித்தார்.
சோனியா மற்றும் இடதுசாரிக் கட்சியினருடன் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வது குறித்தும் வாஜ்பாய்ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications