சிறையில் இருந்து தப்பிய கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சிறையில் இருந்து தப்பிய கைதி தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டிச்சேரி வில்லியனூர் கணுவார்பேட்டையைச் சேர்ந்தவர் தர்மன். இவர் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதாகி, பாண்டிச்சேரிமத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து தர்மன் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, போலீஸார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந் நிலையில் தர்மன் வில்லியனூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications